நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம்.!!

சென்னை

அது cheap publicity இல்லை ; cheapest publicity
‘நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காண காத்திருக்கும் புதிய திரைப்படம் ‘நீயும் நானும்’.

‘ரசிக்க ருசிக்க’ புகழ் பால கணபதி, அவரே இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் அப்படம் அண்மையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.

அப்படத்தில் ஜஸ்மின் மைக்கேல் கதாநாயகியாக நடிக்கிறார் என்றதும் பலரும் பலவிதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர தொடங்கினர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது பாலகணபதி காலுறை அணியாததை ஒரு ரசிகர் சர்ச்சையாக்கியதை தொடர்ந்து பாலா socks பாலா என்று அழைக்கப்பட்டார்.

நீயும் நானும் படத்தில் இடபெறும் பாலகணபதி ஜஸ்மின் திருமண படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் பலவிதமாக பேசத் தொடங்கினர்.

சினிமா துறையைச் சார்ந்தவர்களே அது cheap publicity என பேச தொடங்கினர். செய்தியாளர் கூட்டத்தில் இது தொடர்பில் கேட்ட போது, தம்மை பொறுத்தவரையில் அது , cheap publicity (கீழ்தரமான விளம்பரம்) இல்லை; அது செலவே இல்லாமல் செய்யப்பட்ட cheapest publicity (குறைந்த விலை விளம்பரம்) என கூறினார்.

யார் என்ன சொன்னாலும் தாம் காதில் வாங்கி கொள்ளப் போவதில்லை என்று கூறிய பாலகணபதி, தம்மை பொறுத்தவரை தாம் விளம்பரத்திற்காக எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *