எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express.

சென்னை

எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express

மலேசிய தமிழ் கலைஞர்களின் படைப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. எம்கேயூ மலேசிய கலை உலகத்தின் தலைவர் எஸ்.பி.பிரபா அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

MKU express நிகழ்ச்சியின் அறிமுக விழா இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள சுவாராசெனிமான் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஆதரவு நிறுவனமான மெரந்தாவ் பெர்சாமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் டத்தோ இந்திரன், சூரியா ரவிக்குமார், திருமதி பத்மா ஆகியோருடன் சுவாரா செனிமான் நிறுவன உரிமையாளரும் ராகா வானொலி அறிவிப்பாளருமான அன்புள்ள மாறனும் கலந்து கொண்டார்.

8 அறிவிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் யூடியூப் மற்றும் எம்கேயூ கலை உலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கிலும் வெளியிடப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *