வடசென்னையில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

சென்னை தமிழகம்

சென்னை ராயபுரம் பேரக்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது.இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிலம்பாட்டக் கழகத்தின் மாநிலத்தலைவர்.மு.ராஜேந்திரன் IAS ,வட சென்னை பாஜக பிரமுகர் வழக்கறிஞர் V. கிரிநாத் அவர்களின் தலைமையில்
தமிழ்நாடு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் நடிகை காயத்திரி ரகுராம் போட்டியை டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.

கே.ஜி.முரளி கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஜெ.சீனிவாசன், குப்பன்,சோமசேகர் ஆகியோர் முன்னிலையில்தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அறிவுசார் பிரிவு தலைவர் ஷெல்வி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகிகள் வெங்கட்ராவ்,திருமதி நதியா சீனிவாசன்,கிருஷ்ணா நதானி,பாஜக மாநில ஐ.டி.விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் வெங்கடேசன், சுரேஷ்
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமினி,
எஸ்.ஆர் லக்ஷ்மணன், செயலாளர். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் முத்தமிழன் பாண்டியன், துணைத்தலைவர் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் கமலக்கண்ணன் துணைத்தலைவர் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் பிசி பத்மநாபன் மூத்த ஆசான், சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *