திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.!!

தமிழகம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து ஸ்டாலின், துரைமுருகன் வாழ்த்து பெற்றனர்.

இன்று திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் மரியாதை செய்தார்.

வேட்புமனுக்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

திமுக தலைவராக பொறுப்பேற்கப் போகும் மு. க. ஸ்டாலினுக்கு தங்கை கனிமொழி செல்ல முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மு க ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளிடம் கோபாலபுரத்தில் ஆசி பெற்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *