ஸ்காட்லாந்து நாட்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் 3தங்க பதக்கங்களை வென்ற இந்திய மாணவன்.!!
சென்னை மே 26
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி சேர்ந்த ராகவன் இவர் ஸ்காட்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரது மனைவி ரம்யா ராகவன் ஸ்காட்லாண்டில் பள்ளி ஆசிரியை பணியில் இருக்கிறார் இருக்கிறார்.இவர்களது மகன் தியானேஷ் ராகவன் சென்னையில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இவரது தந்தைக்கு ஸ்காட்லாந்து நாட்டில் பணி கிடைத்ததால் அந்த ஊரில் தன் படிப்பை தொடர்ந்தார்.அவர் தற்பொழுது ஸ்காட்லாந்து பள்ளியில் S4 படிக்கிறார்.சென்னை படிப்புக்கு 10ம் வகுப்பு வரும் தினேஷ் ராகவன் சென்னையில் படிக்கும்போதே நீச்சல் போட்டி கராத்தே போட்டி உள்பட பல்வேறு விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.இவர் தந்தை பணி நிமித்தம் காரணமாக ஸ்காட்லாந்து சென்றதால் அங்கேயே லின்லித்கோ அகாடமி பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார்.சமீபத்தில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற தேசியப் பள்ளி மாணவர்களுக்கான பரபரப்பான கராத்தே போட்டியில் ஸ்காட்லாந்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களை சேர்ந்த பல்வேறு நாட்டு மாணவர்கள் பங்கேற்றனர். இப் போட்டியில் தியானேஷ் ராகவன் கராத்தே போட்டியில் வெளிநாட்டு மாணவர்களை தனது கராத்தே போட்டியில் வீழ்த்தி 3 தங்கப்பதக்கங்களை பெற்றார்.இவர் தங்கப் பதக்கம் பெற்ற செய்தி அறிந்து ஸ்காட்லாந்து வாழ் இந்தியர்கள் தினேஷ் ராகவனை வெகுவாக பாராட்டினார்கள்