தமிழகம் முழுவதும்  2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!

சென்னை
தமிழகம் முழுவதும்
2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை, ஏப் 06
தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று தமிழகத்தில்  44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.  பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து  இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 2 – வந்து நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை லட்சுமி மில்ஸ் அருகே அவிநாசி ரவி என்பவரின் அலுவலகம், ராம் நகர் பி.எஸ்.கே அலுவலகம், அவிநாசியில் உள்ள குடிநீர் ஒப்பந்ததாரர் வேலுமணியின் அலுவலகம் என 3 இடங்களில் வருமான வரித்துறையினர்  நேற்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்றும் 2 – வந்து நாளாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னை அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளிலும், சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில்  2- வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *