75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!!
சென்னை மே 6
சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம் அருகில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளியில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. இப்
பள்ளியில் படித்த மாணவர்கள் கைதேர்ந்த டாக்டர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், வங்கியின் அதிகாரிகளாகவும், கராத்தே, ஜுடோ. விளையாட்டு போட்டி களில் வெற்றி சிறந்து பஞ்சாப்பிலும், ஜப்பானிலும், பல வெளிஊர்களில் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்.
மேலும் இப் பள்ளி மாணவர்கள் இப்போது பல ஓவியப் போட்டிகள், பாட்டுபோட்டிகள்,கலை போட்டிகள், பேச்சு போட்டிகள், ஆகியவைகளில் முதல் பரிசு வென்றுள்ளனர்.
SYMA மூலமாக நம் பள்ளியில் இலவசமாக 10th std&10+1,10+2 மாலையில்,விடுமுறை நாட்களில் டியூஷன் (tuition), எடுக்கப்படுகிறது.
நம் பள்ளி குளிர்ச்சியான இடமாகவும், தெய்வீக அருள்பெற்றஇடமாக விளங்குகிறது.
இப்பள்ளியில் திறமை மிக்க இருபால் ஆசிரியர்களும், விளையாட்டு ஆசிரியர், ஓவிய ஆசிரியர் திறமை மிக்கவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருமணச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளியில் தமிழ் வழிகல்வி இலவசமாக கற்று தரப்படுகிறது. 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு spoken English class இலவசமாக கற்று தரப்படுகிறது.மேலும் பல்வேறு சிறந்த கற்பித்தல் முறை உள்ள இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.