டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!!

விளையாட்டு

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!!

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மான விகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சென்னை அண்ணாசாலை கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பிரியங்கா புகழரசு 50 மீட்டர் பிரி ஸ்டைல்நீச்சல் போட்டியில் தங்க பதக்கமும், 4X100 மீட்டர் பிரீ ஸ்டைல்நீச்சல் போட்டியில் தங்க பதக்கமும் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் வெங்கல பதக்கமும்,4×100 மெட்லி நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கமும், 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் வெங்கல பதக்கம் உள்பட 5 பதக்கங்களை வென்றார். மாணவியின் இச்சாதனையை டெல்லி விளையாட்டு துறை அதிகாரிகளும், சென்னை அண்ணாசாலை கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகமும் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *