குடிநோயில் இருந்து மீண்டு வருபவர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா.!!

தமிழகம்

சர்வதேச குழு அமைப்பான ஆல்கஹால் அனானிமஸ் குழு (குடிநோயால் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள் இயக்கம்) உலகம் முழுவதும் 170 நாடுகளில் செயல்படுகிறது.இந்த குழு அமைப்பானது குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநோயால் மீண்டு வருவது பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக சேவை நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள்.அன்றாடம் மாலை 7 மணி முதல் 8 30 வரை நடைபெறும் இந்த ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு பால்பர் சாலையில் உள்ள No10கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு காவல்துறை டி.ஐ.ஜி டாக்டர் ஆர்.சின்னசாமி,சி.எஸ்.ஐ மறைமாவட்ட பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன்,சமூக ஆர்வலர் ஜே.மேரி பானு,கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் ஏ.பி.மைதிலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மதுவில் இருந்து மீண்டு வரும் குடி நோயாளிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆல்கஹால் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்பு குழு தொடர்புக்கு செல்பேசி எண்கள்
9884191959, 9884689505, 9840494671,
8056216872, 9962459545, 9940067489.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *