சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு குடியிருப்போர் சங்கம் மூலம் உதவிடும் இளைஞர்கள்.!!
சென்னை பிப்ரவரி 10
புனித ரமலான் திருநாளையொட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிட ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் ஜவார் உசைன் கான் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏழை இஸ்லாமிய குடும்பங்கள் ரமலான் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட பிரியாணி அரிசி உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஜவார் உசேன் தெரு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தலைவர் ரபியுல்லா,செயலாளர் மன்சூர்,பொருளாளர் அமானுதீன் உள்பட குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்