மே பதினேழு இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி மே 17 இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பிப்ரவரி 23, 2024 வெள்ளிக்கிழமை மாலை சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் அரசியலுக்கு துணைநிற்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் ஆகியோர் மே 17 இயக்கக் கொடியை அறிமுகப்படுத்தினர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் புருசோத்தமன், தோழர் பிரவீன் குமார், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, மற்றும் மே 17 இயக்கத்தின் தோழர்கள் கொண்டல்சாமி, அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.