ஒட்டன்சத்திரத்தில் இன்று நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் ஆவேச பேச்சு.!!

சென்னை

இந்தியாவில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பிரபலம், ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்கூட்டம் தான் இன்று மிகப்பெரிய பிரபலம் ஆகிறது. பொதுமக்கள் அனைவரும் இருபுறமும் அமோக வரவேற்பு. கட்சியின் பெயர்தான் வேறு ஆனால் நாம் தான் உண்மையான அதிமுக. மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தினால் அனுமதி தருகிறீர்கள் . மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடத்த மட்டும் அனுமதி மறுப்பு ஏன் என கேள்வி எழுப்பினார்.

31ம் தேதி இறுதி தீர்ப்பு. நீதிமன்றத்தை பார்த்து நாங்கள் கேட்கிறோம் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் ஏன்னென்றால் 18 தொகுதிகளில் மக்கள் அவதிபடுகிறார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு நல்லபடியாக வருவதால்  எதிர் அணியில் உள்ளவர்கள். நம்ம பக்கம் வருவார்கள் இரட்டை இலை, அஇஅதிமுக என அனைத்தும் நமது பக்கம் வரும்.

இரண்டு இடைதேர்தல் சவால் விடுகிறேன் எங்களிடம் அரசாங்கம்,பணம்,படை இல்லை நாங்கள் அறிவிப்போம் துணிச்சல் இருந்தால்என மக்கள் யார் வெற்றி பெற செய்வார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடைத்தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் ஒதிக்கினாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். என தங்க தமிழ் செல்வன் பேசினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *