அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !!

தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரூ.10 கோடி கொடுத்தால், ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. ஆனால், அந்த 100 கோடி எங்கு இருக்கிறது? அப்படி எங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தால், ஒரே வாரத்தில் அதிமுகவின் 10 எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் இழுத்தாலே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சேப்பனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், எங்களிடம் பணம் இருந்திருந்தால், அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி இருப்போம் என திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், உலக அளவில் பணக்காரக் குடும்ப வரிசையில் திமுக தான் முதல் இடத்தில் உள்ளது. அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகத்தான் ஆற்காடு வீராசாமி உள்ளார்.

அவர்களிடம் ரூ.100 கோடி மட்டுமல்ல; அதற்கும் அதிகமாகவே உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர் குடும்பம் திமுக குடும்பம். ஆகையால், அவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அந்தயளவுக்கு அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால், அதிமுக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் யாரும் விலைபோக மாட்டார்கள் என கூறினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *