தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!!

தமிழகம்

தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!!

சென்னை செப்டம்பர் 7

கிரிமினல்கள் ஏதோ ஒரு காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார். 33 ஆண்டு கால பணியில் நான் எந்த தவறும் இழைக்கவில்லை. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று கூறினார்.

திமுக வழக்கறிஞர் தனது மனுவில் எந்த இடத்திலும் எனது பெயரை குறிப்பிடவில்லை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். போலீஸ் கமிஷ்னருக்கு லஞ்சம் கொடுத்ததாக குட்கா வியாபாரி டைரியில் எழுதியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுத்ததாக குட்கா வியாபாரி குறிப்பிட்ட தேதிகளில் தாம் காவல் ஆணையராகவே இல்லை என்று கூறினார். மேலும் குட்கா ஊழல் தொடர்பான எப்.ஐ.ஆரில் தமது பெயர் இல்லை என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வதந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். பின்னர் குட்கா ஊழல் குறித்து நானும் முதல்கட்ட விசாரணை நடத்தினேன். மேலும் மாதவரம் துணை ஆணையர் விமலாவிடமும் விசாரணை நடத்தினேன். ஆனால் குட்கா கிடங்கு பற்றி தமக்கு தெரியாது என்று கூறினார்.

நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறிவைக்கப்படுகிறோம் என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் குட்கா ஊழல் நடைபெற்றது உண்மையே என்று கூறியுள்ளார். மேலும் ஊழலை நடைபெறவில்லை என நான் கூறவில்லை என்று தெரிவித்துள்ளர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *