தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!!

சென்னை தமிழகம்

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!!

தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-ம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் அவர்கள் 80 கிலோ எடைப்பிரிவில் முதல் பரிசை பெற்றார். மேலும் இவர் அனைத்து எடைப்பிரிவுகளிலும் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2008 வரை தொடந்து 8 முறை தமிழக ஆணழகன் போட்டியில் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர பல்வேறு பதக்கங்களைப் பெற்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரின் திறமையை  காவல் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *