சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!!

சென்னை

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம்
41 நாள் விரதத்தில் இளம் பெண்.!!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஸ்மா என்ற திருமணம் ஆன இளம் பெண் சபரிமலைச் செல்ல மாலையிட்டு விரதம் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி ரேஸ்மா கூறுகையில், “சபரிமலைக்குப் போகமுடியாது எனத் தெரிந்தும் ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து வந்தேன். இப்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளதால் சபரிமலைக்குச் சென்று சுவாமியைத் தரிசிப்பதற்காக மாலையிட்டு விரதம் தொடங்கியுள்ளேன். 41- நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லுவேன். மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, இயற்கை உபாதை போன்றதுதான் மாதவிடாயும். கடவுள் நம்பிக்கையில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. நான் சபரிமலை செல்ல அரசும், பொதுமக்களும் உதவ வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *