நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன் அன்சாரி தலைமையில் மீட்புக் குழு பயணம்!!

தமிழகம்

நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன்தலைமையில் மீட்புக் குழு பயணம்!!

“கஜா” புயல் 16.11. 18 விடிகாலை – நள்ளிரவு மணி 1 அளவில் நாகை முதல் வேதாரண்யம் வரை கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது.

காற்று வாகனங்களை புரட்டிப் போடும் அளவுக்கு வீசியது. மழை கொட்டியது. நாகை நகரின் வீதிகள் விளக்குகள் இன்றி இருள் கவ்வி மிரட்டியது.

அந்த நிலையிலும் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் ,மஜக பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த சம்பத், தம் ஜுதீன், ஜாஸிம், முரளி, பாரக், செந்தில், இப்ராகிம், விமல், முபீன், ரிபாயி உள்ளிட்டவர்கள் படு துணிச்சலாக காரில் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம், GVR திருமண மண்டபம், சின்மயி பள்ளி, சகுந்தலா ராமசாமி மண்டபம், AsA மண்டபம், கீச்சாங்குப்பம் பள்ளிக்கூடம், அக்கறைப்பேட்டை ஆகிய இடங்களுக்கு , அதிகாரிகளுடன் சென்று மக்களை சந்தித்தனர். குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர்.

அரசு மருத்துவ மனைக்கு சென்று ,அனைவரையும் தயார் நிலையில் இருக்குமாறு கூறினார்.

அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்று மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என அவர்களிடம் தமிமுன் அன்சாரி MLA விசாரித்தார்.

அப்போது புயல் 80 முதல் 120 கி.மீ வேகத்தில் கோரமாக வீசியது. வாகனங்கள் புரளும் அளவுக்கும், மனிதர்களை தூக்கும் அளவுக்கும் வீசத் தொடங்கியது.

யாருமே அங்கு நிற்க முடியவில்லை. அங்குள்ள மீனவ மக்கள் MLA அவர்களை உடனே புறப்படுங்கள் என வலியுறுத்தினர். இந்நேரத்தில், இச்சூழலில் MLA அங்கு வருவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சற்று நேரத்தில் மரங்கள் விழத் தொடங்கியது. விளம்பர பலகைகளும், தகரங்கரம் பறப்பதை பார்த்த அனைவரும் பதறி விட்டனர்.

அப்போது இரவு 1:30 மணி. அச்சமயம் ெசன்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து, பேரிடர் துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள், தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொடர்பு கொண்டு, புயல் காலை 6 மணி வரை தாக்கக் கூடும் என்பதால், உடனடியாக முகாமுக்கு திரும்புமாறு கூறினார்.

அதற்குள் MLA அலுவலகத்தை சுற்றிலும் உள்ள மரங்கள் விழத் தொடங்கியது. எல்லோரும் MLA அலுவலகத்திற்குள் ஒடி வந்தனர்.

பிறகு புயல் நிலவரம் குறித்து , மக்களுக்கு தனது முகநூலில் 1.45 மணியளவில் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரலையில் பேசினார்.

உயிரை பனயம் வைத்து, கடும் புயலில்,நள்ளிரவில் மக்களுக்கு தைரியமூட்டும் வகையில் இவர்கள் அனைவரின் பணிகளும் இருந்தது.நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

தகவல் பதிவு நேரம். நள்ளிரவு 2 Am.
16.11.18

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *