கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா ராகுல் பங்கேற்பு.!!

சென்னை தமிழகம்

கருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு.!!

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,16) மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். விழாவில் கேரள, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, பிரபு, உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரை சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் பணி நடந்தது. புனரமைக்கப்பட்ட அண்ணாதுரை சிலையும், கருணாநிதி சிலையும் இன்று மாலை திறக்கப்பட்டது. சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார்.

கேரள, ஆந்திர முதல்வர்கள்

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் , திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொது செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், , கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மதிமுக பொது செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மாநில செயலர் முத்தரசன், நடிகர்கள் ரஜினி, பிரபு, விவேக், குஷ்பு, வடிவேலு, இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கமல் பங்கேற்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *