நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன் சோனியா பேச்சு.!!

தமிழகம்

காங் மூத்த தலைவர் சோனியாகாந்தி பேச்சு:

நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன்.

இந்த நாளில் தலைவர் கலைஞரின் வாழ்க்கையை அவர்களின் வரலாற்று சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்.

தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்து தமிழகத்தை நிர்வகித்தவர்.

தமிழக சட்டமன்றத்திற்கு 13 முறை போட்டியிட்டு தோல்வியே காணாதவர்.

தமிழை செம்மொழியாக அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி.

தமிழ் மீது தீராப்பற்று கொண்ட காரணமாக நாவல்கள், சிறுகதைகள், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் கலைஞர்.

தன்னுடைய உடன்பிறப்புகளே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.

மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அறிவித்தது கலைஞர்.

பெரியார் அண்ணாவைப்போல கருணாநிதியும் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர்.

மதச்சார்பற்ற அரசியல்வாதியான கருணாநிதியை காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *