நடிகர் விஷால் கைது. திரையுலகத்தினர் அதிர்ச்சி.!!

சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்  நிர்வாகிகள் பலர் சங்கத்திற்கு வருவதே இல்லை என்றும் விஷால் சுயநலத்திற்காக சங்கத்தை பயன்படுத்துகிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்த எதிரணியினர், நேற்று அதிரடியாக தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அத்துடன் பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள தயாரிப்பாளர்சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷால் ஆதரவாளர்கள் நேற்று தி நகர் காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாக சங்கத்தை திறக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஆனால்  உடனடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இன்று காலை நேற்று எதிரணியினர் போட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் மற்றும் மன்சூர் அலிகான் ஏராளமான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *