தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் பொதுக்குழு கூட்டம்.!!

சென்னை தமிழகம்

சென்னை டிசம்பர் 31

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைவர் பி.ஏ. ராஜு, பொது செயலாளர் எல்.சீனிவாசன், துணைச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர்கள், குமரேசன், ஹரி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் பதவியேற்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் திரைப்பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், ஓவியர் ஸ்ரீதர், முன்னாள் கவுன்சிலர் டி சிவராஜ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் பத்திரிகைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த புகைப்பட கலைஞர்கள் கே.விஸ்வநாதன், டி.கிருஷ்ணன், ஸ்ரீதர், மனோகர், சிவராமன், ராஜேந்திரன், ஜீவா, ராஜசேகர் உள்ளிட்டோருக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பன்னிரெண்டு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு கலைமாமணி யோகா, முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், விவேக் கன்ஸ்ட்ரக்ஷன் அதிபர் விவேக் ஆகியோர் சந்தன மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *