மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா !!

சென்னை தமிழகம்

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் !!

சென்னை ஜன 16,
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தந்தை பெரியார் படிப்பகம்- அம்பேத்கர் நூலகம் வி.ஏ.டி நண்பர்கள் சார்பாக 12ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர் எழிலன், 10ம் வகுப்பு +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த விசாலாட்சி தோட்ட மாணவ – மாணவிகளுக்கு ஊக்க தொகைகளை வழங்கினார்.விழாவில் மதுரை வேலு ஆசான் சமர் குழுவினர் வழங்கிய பறை இசை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கள் சுரேஷ் முகிலன் . பொங்கல் விழா குழுவினர் சிவலிலங்கம், வீரமணி ஆசாத், ராஜ்குமார் லோகநாதன் உதய், திராவிடர் விடுதலை கழக தோழர் சுகுமாரன் மற்றும் தமிழர் விடியல் கட்சி பாலாஜிஅய்யா அறகட்டளை.அதிமுக தொழிற்சங்க பி.டி.சி .வீரா, வேலு .தொழிலதிபர். தி.மு.க. பகுதி செயலாளர் மயிலை.த.வேலு, அம்மா மக்கள் முண்ணேற்ற கழக ரிச்சர்ட் கென்னடி.எம்.என்.எம்.
திலக்குமார் .ஆளவந்தான் லோகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *