2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும் திருப்பூர் கூட்டத்தில் மோடி அறிவிப்பு.!!

தமிழகம்

இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது என்று திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் காங்கிரஸ் மீது மோடி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மோடி தனது பேச்சில், நம் நாட்டில் ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்புத்துறை தளவாட பணிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்திலும் ஒரு பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்பட உள்ளது. 2 பாதுகாப்பு பூங்காக்களில் ஒரு பூங்கா இங்குதான் அமைக்கப்படுகிறது.

40 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் ஒரே மாதிரியான வருமானத்திற்காக கோரிக்கை வைத்தனர்.ஆனால் அதை காங்கிரஸ் கொண்டு வரவே இல்லை. இந்திய ராணுவம் புரட்சி செய்ய முயன்றதாக காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் கூறுவது முழுக்க முழுக்க பொய். இந்திய ராணுவம் அப்படி ஒருநாளும் செய்யாது.

பாஜக அரசு ஒவ்வொரு இந்தியருக்குமான அரசாங்கம்.மக்களின் எதிர்காலத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம். இரண்டு மடங்கு வேகத்தில் நாங்கள் சாலைகளை அமைத்து வருகிறோம். சாகர் மாலா திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக மாறி இருக்கிறது.

ஆயுஷ்மான் திட்டம் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்றுள்ளனர். இந்தியாவின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் திட்டம்தான். 11 லட்சமும் பேர் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள். 2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும். வீடு என்பது வேறு சுவர் மட்டுமல்ல : அது மரியாதை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *