ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!!

சென்னை

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக நடைபெற்றது. பல்வேறு கட்சியின் தலைவர்கள்,நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா – விசாகன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்,மதிமுக பொது செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி தமிழக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மு.க.அழகிரி, ஏ.வி.எம் சரவணன்,கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் மகன் மதன்கார்க்கி,இசையமைப்பாளர் அனிருத்,நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் வெங்கட், பி.வாசு, இயக்குநர் செல்வராகவன்,நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் லாரன்ஸ், ,நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால்,நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா,இயக்குனர் ஹரி,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரின் மனைவி சுஹாசினி, நடிகர் விஜய் தந்தை சந்திரசேகர் மற்றும் சோபனா,
தெலுங்கு நடிகர் மோகன் பாபு,நடிகை ஆண்ட்ரியா, நடிகை மீனா,தமிழருவி மணியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் நேரில் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் தேங்காய்,மஞ்சள், குங்குமம் ,இனிப்பு வகைகளுடன் இயற்கையை பரப்பும் வகையில் வேப்பம் மர விதை ஆகியவை அடங்கிய தாம்பூல பை வழங்கப்பட்டது. திருமணம் நடக்கும். திருமணம் நடக்கும் ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் ஓட்டலின் முன்பு ஏராளமான ரஜினி ரசிகர்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *