தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!!

சென்னை தமிழகம்

தமிழக முதல்வராக
எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!!

இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார். எஸ்.பி வேலுமணி. தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு ,ரோஜா, நிலோபர் கபில், உள்பட அனைத்து அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2ஆண்டு சாதனை மலர் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனை மலர் புத்தகத்தை வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெ. ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தமிழக மக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது
போன்ற அரசு சார்பில்
பல்வேறு மக்கள் நல திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *