ஆதரவற்ற குழந்தைகளுக்கு இமான் அண்ணாச்சி நலத்திட்ட உதவி.!!

சென்னை தமிழகம்

சென்னை.பிப்.16 சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரில், ஹெச்ஐவிஇ பவுன்டேஷனிலுள்ள மாணவ, மாணவியர்களுக்கு, தஞ்சாவூர்.கே.இளையராஜா, என்.செல்வமணி ஆகியோர் ஏற்பாட்டில், சன் டிவி புகழ். இமான் அண்ணாச்சி அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, டிபன் பாக்ஸ், பேக், வாட்டர் கேன் ஆகிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி பேசியதாவது: ஆதரவற்றோர் வாழ்வை மேம்படுத்த, இணைந்த கைகள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கி, இந்த ட்ரஸ்ட் மூலம், ஏழை, எளியோர்க்கும், பள்ளி மாணவர்களுக்கும் உதவிகளை செய்து வருகின்றோம். பலர் வழங்கும் நலத்திட்டங்களை, இணைந்த கைகள் ட்ரஸ்ட் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த ட்ரஸ்ட், சென்னை, அரும்பாக்கம், ராஜீவ் காந்தி தெருவில் ( ஜெய்நகர் பார்க் பின்புறம்) செயல்பட்டு வருகிறது. ட்ரஸ்ட் மூலம் உதவி செய்பவர்கள் 9443500405 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம் என்று அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *