தேமுதிக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை விஜயகாந்த் வீட்டில் இன்று மாலை தொடங்கியது.!!

தமிழகம்

தேமுதிக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சாலிகிராமத்தில் விஜயகாந்த் வீட்டில் தொடங்கியது அப்போது பேட்டியளித்த பியூஷ் கோயல் பேட்டி விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனக் கூறினார்

சென்னை: விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின்பு பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் என்று நினைக்க கூடாது என்று பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்து கூறவே வந்தேன் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *