தமிழ் மாநில காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளரை ஜி.கே. வாசன் இன்று அறிமுகப்படுத்தினார்.!!

தமிழகம்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகபடுத்தி பத்திரிகையாளர் முன் இன்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், ராயபுரம் பி.எம். பாலா, பிஜு சாக்கோ, தாமாக மூத்த நிர்வாகி வி.பி ஜவஹர் பாபு, மற்றும் ஏராளமான தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *