பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!!

சென்னை

பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!!

பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி 44-வது வட்டம் கக்கன்ஜி நகர், பெரம்பூர் நட்டால் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஆதரவை திரட்டியதில் பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று உற்சாகப்படுத்தினர். முன்னதாக வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனத்துடன் துவக்கினார்.

இதில் ஜெ.கே.ரமேஷ், மா.ஜெயபிரகாசம், நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன், மு.வெற்றிவேந்தன், ஏ.டேவிட்ஞானசேகரன், என்.எம். பாஸ்கரன், டிஒய்கே.செந்தில்,
கே.எஸ். அஸ்லாம், வட்ட செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், ராஜேந்திரன், கக்கன்ஜி நகர் அ.வேல்முருகன், ஜெஸ்டின் பிரேம்குமார், காந்திநகர் ஜோசப் வின்சென்ட், மற்றும் பலர் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *