தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூரில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

சென்னை

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன். சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் இன்று காலை மயிலாப்பூர் பகுதியில் மக்கள் முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அப்பகுதி முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் வைத்து பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே தொடங்கிய இந்த பிரச்சாரமானது, மெரினா கடற்கரை அருகே உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் நிறைவு பெற்றது. மேலும் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அவர் பேட்டி அளித்த போது நல்ல முறையில் இன்று எழுச்சி மிக்க கூட்டம் கூடியிருக்கிறது என்றும் மக்கள் ஆதரவு நல்ல விதத்தில் உள்ளதாகவும் 40 தொகுதிகளிலும் வெற்றிப்பெறக்கூடிய கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி தான் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

மேலும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றி மக்கள் நலன் பயக்கும் கூட்டணி அமைத்துள்ளதாக கூறிய அவர் ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் மக்களின் எந்த உரிமைக்காகவும் பாடுபடாத கூட்டணி என்று குற்றம்சாட்டினார் வெற்றிப்பெறக் கூடிய இயக்கும் அதிமுக தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *