அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இட்லி விற்கும் பெண்ணிடம் ஓட்டு கேட்டார்.!!

சென்னை

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் கூட்ரோடு, உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் 168,169 வட்டத்தில் பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம், மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ஜே.கே.மணிகண்டன், ஜே.கே.பர்மன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *