தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் கந்தன்சாவடி பகுதியில் டீ கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

சென்னை

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை, சோளிங்கநல்லூர் தொகுதி கந்தன் சாவடி, காளியம்மன் கோயில் பகுதி 184, 186 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி அங்குள்ள மக்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம் மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன் வட்ட செயலாளார்கள் வெங்கடேஷ், ஜானகிராமன், மற்றும் கபாலீஸ்வரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *