தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கிண்டி பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

சென்னை

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை 170 , மற்றும் 174 வது வட்டத்தில் கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கி அப்பகுதி மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் வீதிகளில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஏராளமான பொதுமக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர் . அப்பகுதி பிரச்சினைகள் பற்றி பொதுமக்கள் அவரிடம் வழங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டு அப்பகுதி பணிகளை விரைந்து முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார் .வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, சாமிநாதன், ராஜேந்திர பாபு, எம்.எம்.பாபு, கடும்பாடி, பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் மற்றும் பழனி, பாலசுப்ரமணி, 170 வட்ட செயலாளர் சேக் அலி, 174 சீனு, போர் ரவி, வட்ட பொறுப்பாளர் வசந்தகுமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க வடிவேல், தே.மு.தி.க வி.சி.ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.காமனோகர், ச.ம.க.பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *