மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.!!

சென்னை தமிழகம்

மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு
சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

மூத்த புகைப்படக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்
திரு. ஜார்ஜ் பிரான்சிஸ் வயது 58 , சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக பாதிப்பில் இருந்த திரு. ஜார்ஜ் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (11-04-2019) இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது .

கார்பந்தயங்களை படமெடுப்பதில் பெரும் ஆர்வமும் திறமையும் பெற்றிருந்த திரு. ஜார்ஜ் , இந்தியன் எக்ஸ்பிரஸ் , பி டி ஐ ஆகிய நிறுவனங்களுக்காக பணியாற்றியவர். விளையாட்டு செய்திகளை திறம்பட எழுதிய ஊடகவியலாளர்.
ஸ்கார்ப் நியுஸ் என்கிற செய்தி புகைப்பட ஏஜென்சியை துவக்கி அதன் மூலம் பல பத்திரிகை புகைப்பட கலைஞர்களை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
திரு.ஜார்ஜ் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரது இறுதி ஊர்வலமும் அடக்கமும் சென்னை கொளத்தூர், செந்தில் நகரில்
நாளை 12-04-2019 நடைபெறுகிறது.
திரு.ஜார்ஜ் அவர்களின் சகோதரி ஷீலு பிரான்சிஸ் தொடர்பு எண் :9444015851

ஆழ்ந்த வருத்தங்களுடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *