சென்னையில் ரஜினி பரபரப்பு பேட்டி.!!

தமிழகம்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும் என்றார்.

அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்று உங்கள் ரசிகர்கள் கூறிவருகிறார்களே என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். 234 தொகுதிகளிலும் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார்,” என்றார்.

சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது குறித்த கேள்விக்கு, “பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம். மற்றபடி 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு என்பதே நல்ல விஷயம்தானே. வரும் காலத்தில் அதிக பூத்களை அமைக்க வேண்டும்,” என்றார்.

தேர்தலின்போது நடந்த வன்முறைகள் குறித்த கேள்விக்கு, முந்தைய தேர்தல்களைவிட இந்த முறை வன்முறை சம்பவங்கள் அதிகமாக இல்லை. இந்த முறை தேர்தலை சிறப்பாகவே நடத்தியுள்ளார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *