டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன்- நபீலா திருமண வரவேற்பு சென்னையில் மிக எளிமையான நடைபெற்றது.!!

சென்னை

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், சென்னையில் மிக எளிமையான நடைபெற்றது.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் மணமகள் என்பதால் குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமத்துக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது. குறளரசன் – நபீலாவின் திருமண வரவேற்பு சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,நடிகர் சிவகுமார் ,லதா ரஜினிகாந்த்,நடிகர் அரவிந்த்சாமி, குஷ்பூ சுந்தர், நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கவுண்டமணி அதர்வா, நடிகர் விவேக், நடிகர் விக்ரம் கார்த்திக், இயக்குனர்கள் சங்கர், கார்த்திக் சுப்பராஜ், உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை டி ராஜேந்திரன் – அவரது மனைவி உஷா சிலம்பரசனின் அண்ணன் நடிகர் சிம்புவும் வரவேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *