ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!

சென்னை தமிழகம்

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!

திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலருமான திருமதி ரோகிணி பேசியபோது எடுத்த படம்

சென்னை மே 19

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா கூட்டம். சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்  இந்த ஆண்டு விழா நடைபெற்றது.பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மறைமாவட்ட ஆயர்பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீபன்
அயனாவரம் மன நல மருத்துவ நிறுவனம் இயக்குனர்பூரணசந்திரிகா,சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகையுமான திருமதி ரோகிணி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில் இந்தியா முழுவதும் உள்ள ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குழு உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குழு என்பது குடிநோயால் பாதிக்க பட்டவர்கள், அதிலிருந்து மீள்வதற்கான அமைப்பு இந்த இயக்கத்தின் கூட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள 160 நாடுகளில் நடைபெறுகிறது. குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அக்கூட்டங்களில் கலந்து கொண்டு குணமடைந்து வருகின்றனர். குடி நோயால் பாதிக்கப்பட்டவரோ , அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றனர். இவ்வாறு நடைபெறும் கூட்டங்களுக்கு அனுமதி இலவசம் தான் என இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *