மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும், மனோரமா பெயரில் சென்னையில் உள்ள சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு இயக்குநர் கே பாக்யராஜ் கோரிக்கை.!!

தமிழகம்

தமிழக அரசிற்கு கே.பாக்யராஜ் கோரிக்கை…!!
மனோரமாவின் பெயரில் விருது வழங்க வேண்டும்-பிரதான சாலைக்கு
மனோரமாவின் பெயரை வைக்க வேண்டும்-
-மனோரமாவின் சிலையும் தமிழக அரசு நிறுவ வேண்டும்…!!

மறைந்த பிரபல நடிகை ஆச்சி மனோரமா அவர்களின் 82-வது
பிறந்தநாள் விழா கடந்த 26-5-2019.ஞாயிறு அன்று சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடமியில் நடந்தது.இவ்விழாவினை மனோரமாவின் குடும்பத்தார்களும்-வி.கே.ஆர்.கல்சுரல் அகடமியும் இணைந்து நடத்தினார்கள்.தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நிகழ்ச்சி தொடங்கும் முன் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பேத்தி பிரபா மனோரமா பாடியபாடல்களைப் பாடினர்.மனோரமா நடித்த படங்களின் தொகுப்பு சிலவற்றை திரையில்ஒளிபரப்பினார்கள்.
நடிகை எஸ்.என்.பார்வதி,ஸ்ரீகவி,எஸ்.சந்திரமௌலி,ஸ்ரீனிவாசன் கண்ணதாசன்,மெய் ரூஸ்வெல்ட் ஆகியோர் மனோரமாவைப் பற்றிய
நினைவுகளை வாழ்த்திப் பேசினார்கள்.மூத்த சினிமா பத்திரிகையாளர்களும்-சினிமா மக்கள் தொடர்பாளர்களுமான “திரைநீதி”
செல்வம்,மேஜர் தாசன் இருவர்களுக்கும் “மனோரமா விருது”வழங்கப்பட்டது.இயக்குநர் கே’.பாக்யராஜும்,நல்லி குப்புசாமி
செட்டியும்,மனோரமாவின் மகன் பூபதியும் இவ்விருதினை இணைந்து வழங்கினார்கள்.மனோரமாவின் பெயரில் தமிழக அரசு விருது ஒன்றினை ஏற்படுத்தி சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களுக்கு வழங்க முன் வரவேண்டும்,சென்னையில் பிரதான சாலைக்கு மனோரமாவின் பெயரை வைக்கவேண்டும்,அவருடைய திருஉருவச் சிலை ஒன்றினை
அரசு நிறுவ வேண்டும் …என்ற மூன்று கோரிக்கைகளை விழாக் குழுவினர்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோளாக முன் வைத்தனர்,.இந்த கோரிக்கைகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியும்,கே.பாக்யராஜும் வலியுறுதிப் பேசினார்கள்.வி.சுபாஷ்சந்திரன்
.வி.கே.தமிழரசன் மற்றும் மனோரமாவின் மகன் பூபதி,மருமகள் தனலட்சுமி மற்றும் மனோரமாவின் பேரன் பேத்திகள் அனைவரும் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று கவுரவித்து நன்றி கூறினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *