தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.!!

தமிழகம்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மே 29 பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

சாதாரண நாட்களைவிட இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் வானம், மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் இருக்கும்.

மே 29-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *