நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!!

தமிழகம்

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!!

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மனமுடைந்தார் இதை இதைத் தொடர்ந்து நீட் தேர்வின் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த தஞ்சையை சேர்ந்த மாணவி சஹானாவிற்கு நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மனமுடைந்து போன சஹானாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வருத்தப்பட வேண்டாம் என்றும், உடனே சென்னைக்கு கிளம்பி வரவும் என்றும், சென்னையில் ஒரு சிறப்பான நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்து அதற்கான செலவு, சென்னையில் தங்குவதற்கும் உணவுக்குமான செலவு அனைத்தையும் தானே பொறுப்பேற்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவி சஹானா நடிகர் சிவகார்த்திகேயனை சந்திக்க சென்னை வரவிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *