ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு சிபிஐ(எம்) கண்டனம்.!!

தமிழகம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து
பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு
சிபிஐ(எம்) கண்டனம்.!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜூன் 5ந் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை கடலுhர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில இடங்களில் தடையை மீறி பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கடலுhர் மாவட்டத்தில் தடையை மீறி பிரச்சாரம் செய்த கட்சியின் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இத்தகைய அராஜக நடவடிக்கைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதே போல் தான் எட்டுவழிச்சாலை அமைந்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் மூலம் பிரச்சாரம் செய்ய முயன்றபோது, பிரச்சார பயணத்தை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாநில அதிமுக அரசு, இதுபோன்ற ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையின் அடிப்படையில், அரசின் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்குமா அல்லது தீமையை விளைவிக்குமா என்று மக்களிடையே பிரச்சாரம் செய்கிற உரிமை அனைவருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு, காவிரி பாசன மண்டலமே நாசமாகும் ஆபத்து உள்ளது என்பதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முனைந்தது. ஆனால், இந்த உரிமையை அதிமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது.

அதிமுக அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு, மத்திய அரசு கொண்டு வரும் இத்திட்டத்தின் பாதிப்புகளை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்குவதோடு, இத்திட்டத்தை தமிழகத்தில் தடைசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது என கே.பாலகிருஷ்ணன் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *