தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரானார் பாரதிராஜா.!!

தமிழகம்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரானார் பாரதிராஜா.!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து சென்னை கமலா திரையரங்கில் நேற்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திரைத் துறை சார்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *