நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பாக்யராஜ் தலைமையில் விஜயகாந்தை சந்தித்தனர்.!!

தமிழகம்

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர் .நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என பாக்கியராஜ் இன்று பேட்டி அளித்தார்!!

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசவில்லை என பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். விஷால் அணியினர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஐசரி கணேஷ் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *