தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.!!

சென்னை தமிழகம்

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் ஹர்மேந்தர் சிங் அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தார்.
உடன் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என். ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். மற்றும்
சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர் ஆகியோர் இருந்தனர்.

ஹர்மேந்தர் சிங் பேசியதாவது,

சென்னை மாநகராட்சியை பொருத்த வரை ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை இருந்து வரும் நிலையில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க பட்டு வருகிறது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மழை இல்லா விடினும் ஜூன் முதல் நவம்பர் வரை 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்றும், இதற்காக 9 ஆயிரம் லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதில் 6,500 லாரிகளில் தண்ணீர் இலவசமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக தமிழக அரசு 233.72 கோடி வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

லாரி போக முடியாத இடங்களில் 358 இந்தியன் மார்க் பாம்புகள் மூலம் தண்ணிர் விநியோகம், 12,128 குடிநீர் தொட்டிகள் அமைத்தல், 1,190 HDPE தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தல் போன்ற சில முயற்சியின் மூலம் சென்னையின் தண்ணீர் பற்றாகுறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவுத்தார்.

பொது மக்களுக்கு கோரிக்கை
       80 லட்சம் மக்கள் வாழும் சென்னையில், வாலி, மக்குகள் மூலம் தண்ணீரை உபயோகிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் வரை தண்ணீரை சேமிக்கலாம் என்றும்,

குடிநீர் வினியோகத்தின் போது, தண்ணீரை பதுக்கி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மூலம் இதுவரை 180 மோட்டர்கள் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக 4 5 6 7 4567 என்ற சேவை என்னை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் .

வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினையை தவிர்ப்பதற்காக சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் 416 கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 200 ஏரிகளில் சுத்திகரிப்புப் பணி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *