தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!!

சென்னை தமிழகம்

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 16.06.2019 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த 5 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , மேலும் 150 பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் , லஞ்ச் பேக் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்த மாநில தலைவர் ஜெ.பி. செல்வம், மாநில பொதுச்செயலாளர் என்.குமரவேல் , மாநில பொருளாளர் எம்.ஐ.சரவணன், மாநில அமைப்பாளர். சத்தியேந்திரன், தென்சென்னை மாவட்ட செயலாளர், ஜே.வி.விக்ரம், ஜெயக்குமார், பாலு,கணேஷ் ரஜினி,கார்த்தி, ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கார் ஓட்டுனர்கள் வந்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *