ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.!!

தமிழகம்

 

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பாததால் திமுகவில் இணைந்தேன் தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.!!

திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது, அதை ஏற்று நான் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் அமமுகவில் இருந்து விலகி தங்கதமிழ்ச்செல்வன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவை பாஜக இயக்கி வருகிறது என்றும் தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பாததால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், ‘ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும், அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது.ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின்.துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின் அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது.கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன் என பேசினார். அவருடன் ஏராளமான தேனி மாவட்ட ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் கலந்துு கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *