வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!!

தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!!

வேலூர் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம்ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வேலூருக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது நடை பயண பயிற்சியின்போது வேலூர் தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனத்துக்கு வாக்குச் சேகரித்தார்.

அப்பகுதி விவசாயிகள் மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அப்போது மக்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.உழவர்சந்தைக்கு வெளியே திரண்டிருந்த மக்களிடம் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்குச் சேகரித்தார். இன்று மாலை கே.வி.குப்பம் சட்டம்ன்றத் தொகுதிக்குட்பட்ட , செஞ்சி, பனமடங்கி, பரதராமி, சித்தூர்கேட், கொண்டசமுத்திரம், கீழ் ஆலத்தூர், பி.கே.புரம், கே.வி.குப்பம், வடுகந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய இருப்பதாக வேலூர் மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *