சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!!

சென்னை தமிழகம்

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!!

சென்னை ஆகஸ்ட் 17

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.சென்னையில் பாரிமுனை, துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தாம்பரம், போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஒரு சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று நள்ளிரவு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *