சாதீயத்தை எட்டி உதைத்தவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு.!!

தமிழகம்

சாதீயத்தை எட்டி உதைத்தவர்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி

நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு

நாகர்கோவிலில் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நவம்பர்-1ந்தேதியொட்டி புத்தக வெளியீட்டு விழா நடந்தது.இதில் தமிழுலகன் எழுதிய ‘சேரன்றே மக்கள்’நாவல் வெளியிடபட்டது.இந்நாவலை இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வெளியிட ,சாகித்ய அகாதெமி விருதாளர் நாவலாசிரியர் மலர்வதி பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் இயக்கனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது:

இன்றைய தலைமுறையினர் வரலாறுகளை தெரியாதவர்களாக உள்ளார்கள்.முகநூல்களிலும்,சமூக வலை தளங்களிலும் தன்னை பலி கொடுக்கும் நோயாளிகளாக இன்றைய இளைய சமுதாயம் மாறிக் கொண்டிருப்பது ஆபத்துக்குரியதாக உள்ளது.

குமரி மண்ணை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்கு எத்தனையோ தலைவர்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.அவர்கள் குறித்த தியாக வரலாற்றினை வளரும் தலையினர் அறிந்து கொள்வது அவசியம்.அத்துடன் தன்னை இப்போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்தி போராடியவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி.இன்றைய நிலையில் நாம் பார்க்கிற நாகர்கோவில் கோர்ட்டில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய சாதி பாகுபாடு கொடுமையானது.அப்போது வழக்கறிஞராக கோர்ட்டுக்குள் நுழைந்த மார்ஷல் நேசமணி அங்கு உயர் சாதியினருக்கு என்று போடப் பட்டிருந்த நாற்காலியை எட்டி உதைத்து உடைத்து எறிந்தார்.இது சாதீய படிமானத்தை,மேலாதீக்கத்தை எட்டி உதைத்த அவருடைய விவேக மிக்க துணிச்சலைக் காட்டுகிறது.ஆதிக்கமென்பதற்கு எதிராகவே பல இடங்களிலும் மார்ஷல் நேசமணி களமாடினார்.

இந்த ஆதிக்கம் என்பது உலகம் முழுவதும் எளிய மக்களை ஒடுக்குவதாகவோ உள்ளது.அது மொழி,இனம்,பண்பாடு சார்ந்துள்ளது.தென் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இந்த ஒடுக்கு முறையானது தமிழினத்துக்கு பாதகமாயிருந்தது.சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்த தமிழர்களை ஆதிக்கத்துக்கு எதிராக போராடி மீட்டெடுத்தார் மார்ஷல் நேசமணி.சாதீய மேலாதீக்கம்,தமிழர்,தமிழ் மண்ணுக்காவும்,மொழிக்காவும் களமாடி வெற்றிக் கண்டவர் நமது குமரி தந்தை மார்ஷல் நேசமணி.

உலகையே தன்னாதிக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று போர்தொடுத்து வந்த அலெக்ஸாண்டர் தனது 33-வயதில் காலமானார்.இஸ்ரேலை அடிமை படுத்த நினைத்த ஆதிக்கமும் இன்று இல்லாமல் போய் விட்டது.இவ்வாறு உலகம் முழுவதும் வல்லாதீக்கமென்பது கால போக்கில் எளியவர்களின் தலை நிமிர்வுகளால் காணாமல் போவதுதான் சரித்திரமாகும்.

நான் அய்யாவழி படம் எடுக்கும் போது நாவலாசிரியர் பொன்னீலனுடன் கதை விவாதம் செய்ததுண்டு.அவருடைய ஆலோசனைகளை கேட்டதுண்டு.எனவே வளரும் புதிய தலைமுறையினர் மூத்தவர்களிடம் கதை கேட்க வேண்டும்.நவீன கால கட்டத்தில் முந்தைய தலை முறையினரிடம் கதை கேட்பதும்,பேசுவதும் அருகி விட்ட நிலையில் தனது 80-வயதில் நமக்கு தனது நாவல் வழியாய் கதை சொல்கிறார் தமிழுலகன்.அவருக்கு தமிழ் படைப்புலகம் வரவேற்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவிற்கு நாவலாசிரியர் பொன்னீலன் தலைமை தாங்கினார்.முனைவர் ஆல்பன்ஸ்நத்தானியேல்,கவிஞர்.சுதேகண்ணன்,முனைவர் பத்மனாபன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதற்சங்கு சிவனிசதீஷ் வரவேற்று பேசினார்.

இதில் முனைவர் சுயம்புலிங்கம்,தியாகி முத்துகருப்பன்,தக்கலை சந்திரன்,உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.நூலாசிரியர் தமிழுலகன் ஏற்புரையாற்றினார்.தமிழ்வானம் சுரேஷ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை கவிஞர்.இனியன்தம்பிதொகுத்து வழங்கினா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *