தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!!

தமிழகம்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!!

அமெரிக்காவில்  நடைபெறும் மாநாடு கருத்தரங்குகளிலும் தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழ் சங்க நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு 17 ந் தேதி சென்னை திரும்புகிறார்.

தமிழக துணை முதல்வரின் அமெரிக்க பயண விபரங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (8.11.2019) முதல் 17.11.2019 வரை அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதித்தல், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்தல்,

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்ந்த திட்டப்பணிகளை பார்வையிடுதல், சிகாகோ நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தல், சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழா மற்றும் இந்தியன் அமெரிக்கன் பிசினஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கன் தமிழ் தொழில்முனைவோர் சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

விருது

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (8 ந் தேதி) அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றடைகிறார். 9 ந் தேதி அன்று மாலை சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 10 ந் தேதி அன்று அமெரிக்கன் மல்டி எத்னிக் கோலிஷன் இங்க்… சார்பாக நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழாவில் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆப் த இயர் ஆசியா அவார்ட் என்ற விருது துணை முதலமைச்சருக்கு வழங்கப்பட இருக்கிறது.

12 ந் தேதி அன்று சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழா மற்றும் இந்தியன் அமெரிக்கன் பிசினஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கன் தமிழ் தொழில்முனைவோர் சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

தொழில் அதிபர்களுடன் சந்திப்பு

13 ந் தேதி அன்று துணை முதலமைச்சர் வாஷிங்டன் டிசி செல்கிறார். அங்கு அவர்களுக்கு இந்தியன் அமெரிக்கன் பிசினஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கன் மல்டி எத்னிக் கோலிஷன் இங்க்… அமைப்புகளின் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

14 ந் தேதி அன்று ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15 ந் தேதி அன்று ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான எலெக்ட்ரானிக்ஸ் டோனர் போர்டை தொடங்கி வைக்கிறார்.

16 ந் தேதி அன்று நியூயார்க் சென்று இந்தியன் அமெரிக்கன் கம்யூனிட்டி மற்றும் தமிழ் அசோசியேஷன்ஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, நிதித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உடன் செல்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் 17 ந் தேதி அன்று தமிழ்நாடு திரும்புகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *